சேலம்மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் குஞ்சம்மாள் வயது 62 இவரது மகள் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சீதாலட்சுமி புரத்தில் வசித்து வந்த நிலையில் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்ற தகவலை அறிந்த குஞ்சம்மாள் தனது மகளை பார்க்க கோபி வந்துள்ளார்.
அப்போது அவரது மகளும் அவரது கணவரும் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடப்பதை கண்ட வேதனையில் குஞ்சம்மாள் செய்வதறியாது மகளின் வீட்டை விட்டு வெளியேறி
திருப்பூர் செல்லும் சாலையில் உள்ள கீழ்பவானி வாய்காலுக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் தண்ணீரில் குதித்துள்ளார்.
குஞ்சம்மாள் தற்கொலை செய்வதற்காக வாய்காலில் குதித்ததை பார்த்து அருகே துணி துவைத்துக்
கொண்டிருந்தவர்கள் குஞ்சம்மாளை காப்பாற்றும்படி சத்தமிட்டுள்ளனர் .
இதனையடுத்து அந்த வழியாக சென்ற ஆண்கள் சிலர் உடனடியாக வாய்காலில் குதித்து தண்ணீரில் தத்தளித்த மூதாட்டி குஞ்சம்மாளை மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டு வந்து சேர்த்த பின் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்.
குஞ்சம்மாளிடம் விசாரணை நடத்தியதில் அவரது மகளும் மருமகனும் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருவதை கண்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வாய்காலில் குதித்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் மூதாட்டி குஞ்சம்மாளுக்கு ஆறுதல் கூறி அவரது மகள் வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.