திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சி சார்பில்  பிரதமர்   நரேந்திர மோடியின்  கனவு திட்டமான என் மண் என் தேசம்  நிகழ்ச்சியின் செயல்பாடுகள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும்  சரித்திர புகழ் வாய்ந்த  சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த பகுதியிலிருந்தும் மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களில் இருந்தும் மண்ணை  சேகரித்து அதனை ஒரு குவளையில் எடுத்து பூஜை, புனஸ்காரம் செய்து அதனை சென்னை கமலாலயத்தில் ஒப்படைத்து பின்னர் இந்த கலசங்களை  நரேந்திர மோடி அவர்களிடம் 31.10.23 அன்று  ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம்.  இந்த மண்ணை அயோத்தியில் வனம் உருவாக்கி அந்த இடத்தில் மரக்கன்றுகளை வளர்த்து பின்னர் பத்து ஆண்டுகள் கழித்து பார்க்கும் பொழுது மிகப்பெரிய வனமாக காட்சியளிக்கும். இந்த மண்ணை சேகரிக்கும் பொறுப்பினை ஒவ்வொரு ஒன்றியத்திலும் 30  வயது உடையவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் இந்த கலசத்தினை  நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பார்கள். இவ்வாறு தெரிவித்தார் தெற்கு மாவட்ட பிஜேபி தலைவர் பாலசுப்ரமணியம் அவர்கள் மேலும் செய்தியாளர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் குருகையில் இந்த நாட்டில் ஆளுநர் மாளிகைக்கு பெட்ரோல் குண்டு வீசி இருப்பதால் தமிழக அரசு சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் விடிய அரசு இத்தகைய நிலை மேற்கொண்டுள்ளது. அதேபோல்  மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் இல்லத்தின் அருகே கொடி கம்பம் அகற்றப்பட்டது எதிரொலியாக தமிழகத்தில் வருகிற ஒன்றாம் தேதி முதல் பிப்ரவரி மாதம் வரை 100 நாட்களுக்குள் 10 ஆயிரம் கொடிக்கம்பங்களை நட உத்தரவிட்டுள்ளார் அதனை கருத்தில்க்கொண்டு திருவண்ணாமலை 22 ஒன்றியங்களில் பிஜேபியின் கொடிக்கம்பம் சுமார் 400க்கும் மேற்பட்ட கம்பங்கள் நட ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன தற்பொழுது படவேடு மற்றும் கலசப்பாக்கம் அருகே இரண்டு இடங்களில் கொடி கம்பங்கள் நடத்தப்பட்டு உள்ளனஎன்று தெரிவித்தார் மேலும் இந்நிகழ்ச்சிக்கு  தெற்கு மாவட்டத் தலைவர் ஆர் .பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது என் மண் என் தேசம்  நிகழ்ச்சி பொறுப்பாளர் ஆர் .சேகர் மாவட்ட பொதுச் செயலாளர் குமரராஜா .மாவட்ட பொருளாளர் எஸ் .பி. கே. சுப்பிரமணி மாநிலச் செயலாளர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு டி. அறவாழி மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லி செல்லும் தன்னார்வர்கள் கலசப்பாக்கம் எம். ஐயப்பன் புதுப்பாளையம் ஸ்ரீ. பிரகாஷ் சங்கம் எஸ். முருகன் திருவண்ணாமலை எஸ். கார்த்திகேயன் கீழ்பெண்ணாத்தூர் பாவேந்தன் துரிஞ்சாபுரம் தினகரன் மற்றும் நிர்வாகிகள்  கலந்து கொண்டு கொண்டனர்  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது