தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டுறவு துறை மூலம் சிறப்பு கடன் வழங்கும் விழா நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச்செல்வி போஸ் முன்னிலை வகித்தார். தென்காசி மண்டல இணைப்பதிவாளர் கு.நரசிம்மன் வரவேற்புரை நிகழ்த்தினார். தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன் உட்பட ரூ.32 கோடிக்கு பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கி விழாவில் கீழ்க்கண்டவாறு உரை நிகழ்த்தினார்.மாவட்ட ஆட்சித் தலைவர் நிகழ்த்திய பேரூரையில் விவசாயிகள், நகர்ப்புறமக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய நலிவுற்ற மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் சேவை செய்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் தென்காசி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள விவசாயிகள், தாங்கள் விவசாயம் செய்வதற்கு தேவைப்படும் வட்டியில்லாத பயிர்க்கடன் மற்றும் உரம் ஆகியவற்றை தங்கள் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், இக்கடனை தவணை தேதிக்குள் திருப்பிச் செலுத்தினால் வட்டிவசூலிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம்கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்,வீடு அடமானக்கடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன், சிறு வணிகக் கடன், தென்னை மற்றும்எலுமிச்சை பராமரிப்புக் கடன் ஆகியவை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தென்காசி மாவட்டத்தில் இதுவரை ரூ.340 கோடி அளவிற்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளனஎன்றும் தெரிவித்தார்.
இவ்விழாவில் சங்கரன்கோவில் சரகத் துணைப்பதிவாளர் ரா.திவ்யா, தென்காசி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் மாரியப்பன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் சுரேஷ்,கோபிநாத், ரமேஷ்பாபு,ராஜ், முப்புடாதி, ஸ்ரீவித்யா மற்றும் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் மேலகரம் பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டியன், மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம், வார்டு கவுன்சிலர் சிங்கத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக துணைப்பதிவாளர் கார்த்திக் கௌதம் நன்றி கூறினார்