நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை நாங்குநேரி தாசில்தாரும், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான மோ.விஜய் ஆனந்த் வெளியிட்டார்.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, இந்திய தேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளின் பிரதிநிதிகளும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் ஆழ்வாநேரி சேவை எஸ்.பாக்கியமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.