கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈயனூர் கிராமத்தைச் சேர்ந்த சத்யா கணவர் பாலமுருகன், பாலமுருகன் மூன்று மாதத்திற்கு முன்பு கட்டிட வேலை பார்க்கும்போது விபத்தில் இறந்து விட்டார். தற்போது சத்யா இவர்களுக்கு ஹேமலதா, பூர்விகா, செந்தமிழ், செல்வரசி, ஜனனி என ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது எதிர்காலம் பிள்ளைகளின் கல்வி, பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. தனது 5 பெண் பிள்ளைகள் தங்குவதற்கு ஏற்ற வீடு இல்லை என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை நேரில் அழைத்து சென்று பசுமை வீடு, குழந்தைகளின் எதிர்காலம் கருத்தில் கொண்டு தனக்கு நிரந்தர வேலை அல்லது சுயதொழில் தொடங்க இலவச தொழில் பயிற்சி தரவேண்டும் என கிராமத்தின் ஒளி சார்பாக கோரிக்கை விடுத்தனர். 

     கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவனம் சார்பில்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் தையல் இயந்திரம் வழங்க பட்டது.மேலும் மாவட்ட ஆட்சியர். ஷ்ரவன்குமார் அவர்கள் இந்த குடும்பத்திற்கு சொந்தமான பசுமை வீடு கட்டி தர ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் .ஷ்ரவன்குமார் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி தீபிகா, கிராமத்தின் ஒளி நிர்வாக இயக்குநர் முனைவர் ச.சக்திகிரி, இயக்குநர் மேகலா, கிராமத்தின் ஒளி பணியாளர்கள் மருதுபாண்டியன், ரவி, செல்வராஜ் மற்றும் மாவட்ட அரசு அலுவலகர்களும் கலந்து கொண்டனர்.