வேலூர் மாவட்டம், வேலூர் கொணவட்டம் மற்றும் ரங்காபுரம் ஆகிய இடங்களில் ஏசிஎஸ் மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமினை ஏ,.சி.சண்முகம் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.சி.எஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகள் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமினை புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்  அவர்கள் துவக்கி வைத்தார்.இம்முகாமில் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை, அறுவை சிகிச்சை,தோல் நோய்களுக்கான சிகிச்சை காது, மூக்கு ,தொண்டை ,உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு கண் சிகிச்சை செய்தவர்களுக்கு கண்ணாடிகளை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்கள் வழங்கினார்.இந்த மருத்துவ முகாமில் மக்களுக்கு சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிறதா எனவும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இம்முகாமில் திரளான மக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்று  பயனடைந்தனர். , இம்முகாம்களில் கலந்து கொண்டு பயனடைந்த பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.