தீபாவளி பண்டிகை வருகிற 12-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.தீபாவளி என்று சொன்னால் இனிப்பு பலகாரங்களும் குழந்தைகளுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும்மகிழ்ச்சி தருவது பட்டாசுதான். பட்டாசு என்பது இந்த தீபாவளி பண்டிகையில் எல்லா குடும்பத்திலும் அங்கம் வகிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தற்காலிகமாக பட்டாசு கடைகளை தனியார்கள் விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் இதற்காக பட்டாசு கடை நடத்திக் கொள்ள ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. விண்ணப்பம் செய்துள்ள பட்டாசு கடைகளை வருவாய்த்துறையினர் தீயணைப்பு துறையினர்.காவல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டிருந்த நிலையில்.மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார். திருத்தணியில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பித்திருந்த கடைகளை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும். தீயணைப்பு கருவிகள் பொருத்த வேண்டும். மற்றும் கடைகளுக்கு செல்வோர் வருவோர் என இரு வழிகள் அமைக்க வேண்டும் மணல் மூட்டைகள் . தண்ணீர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறுஇல்லாமல் கடை நடத்துபவர்கள் கடைகளை அமைக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கி ஆய்வு மேற்கொண்டார். இதில் திருத்தணி தாசில்தார் மதன். வருவாய் ஆய்வாளர் கமல். மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.