இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆணைங்கினங்க கூடுவாஞ்சேரி சிக்னல் பகுதியில் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் ரமேஷ் ஏற்பாட்டில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் கூடுவாஞ்சேரி பகுதியில் விலையில்லா தலை கவசம் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், சிறுபான்மை அணி பிரிவு செயலாளர் பசிலத் பானு, மாநில விளம்பர பிரிவு செயலாளர், முத்தமிழ்செல்வன், துணைத் தலைவர் இளவரசிஜெரோம், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் உமாபதி, மாவட்டதிரைப்பட பிரிவு செயலாளர் காக்கா முட்டை சசிகுமார், மறைமலைநகர் நகர தலைவர் பிரதீப்சேகர், மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக செயலாளர் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் இலவசமாக தலைக்கவசம் வாங்கிச் சென்று மகிழ்ச்சியுடன் இந்திய ஜனநாயக கட்சி சேர்ந்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.