சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி சமுதாய கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.பி.டி.ஓ செல்வகுமார் முன்னிலை வகித்தார்.மற்றும் மருத்துவ அலுவலர் பாக்ய தீபா, வளர்ச்சி திட்ட அலுவலர் வித்ய பிரபா, பனமரத்துப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் வசந்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன்,பிரதீப்,சத்யராஜ், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நூறு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்து ஐந்து வகையான சாதங்கள் பரிமாறப்பட்டது.