அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்கராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி, மகளிர் குழு அமைத்தல், இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளரும், அமைப்புச் செயலாளருமான சுதா.கே.பரமசிவம், மாவட்ட செயலர் எம்ஏ முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து ஆவேசனை வழங்கினர்.இதில் மாநில எம்.ஜிஆர் மன்ற துணை செயலாளர் வழக்கறிஞர் மு.சுந்தரபாண்டியன், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆர்ஜி ரத்தினம், மாவட்ட அவைத்தலைவர் எம்.சாமிநாதன், இணை செயலர்கள் கவிதா சசிகுமார்,, பொருளாளர் குமரவேல், நகர் செயலாளர்கள் என் ஆர் பால்பாண்டியன் ( ராமநாதபுரம்), ஒன்றிய செயலர்கள் எம்.அசோக்குமார் (ராமநாதபுரம்), ஆர்ஜி மருதுபாண்டியன்(மண்டபம் மேற்கு), முதுகுளத்தூர் எஸ்.டி.செடிந்தில்.குமார்ஜி ஜானகிராமன் (மண்டபம் கிழக்கு), பி.கருப்பையா, செல்லதுரை, எம்.ராதாகிருஷ்ணன், கே.சுப்ரமணியன், பூமிநாதன், மண்டபம் பேரூர் செயலர் சீமான் மரைக்காயர், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஜிஎம் ஸ்டாலின் (எம்ஜிஆர் மன்ற இளைஞரணி), கே.செந்தில்குமார் (மாணவரணி), ஏ.சரவணகுமார்(தகவல் தொழில்நுட்பம்), டாக்டர் இளையராஜா (மருத்துவ அணி), எம்.உதுமான் அலி (சிறுபான்மை பிரிவு), பழனிமுருகன், எம்எஸ் அருள், கலந்து கொண்டனர்.நகர் துணை செயலர் ஆரிப் ராஜா நன்றி கூறினார். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதில் பாரபட்சம் காட்டும் தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு எதிர்ப்பு குரல்களுக்கு மத்தியில் முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமியை பசும்பொன் தேவர் ஜெயந்தி, குரு பூஜைவில் பங்கேற்கச் செய்த மாவட்ட செயலர் எம்ஏ முனியசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.