ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் விபத்திலா தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் எல்எப் ரோடு, பகுதிகளில் நேற்று துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில்ராக்கெட் போன்ற வானவெடிகளை குடிசைகள் இல்லாத திறந்த வெளி யில் வைக்க வேண்டும்.பட்டாசு கொளுத்தும் போதுஇறுக்கமான ஆடைகள் மற்றும் காலணிகள் அணிய வேண்டும்.வெடிக்காத வெடிகளை கையில் எடுக்கக் கூடாது.குழந்தைகள் சட்டை பையில் பட்டாசுகளை வைத்திருக்க அனுமதிக்க கூடாது.பட்டாசு வெடிக்கும் போது பக்கெட்டுகளில்தண்ணீர் வைத்திருக்க வேண்டும். இது போன்று பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை பொது மக்களுக்கு எடுத்து ரைத்தனர்.