செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பல வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த பென்ச் அண்ட் பார்(நீதிபதிகள் வழக்கறிஞர்கள் கலந்தாய்வு) கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெ.மேவிஸ் தீபிகா சுந்தரவதனா , கூடுதல் மாவட்ட நீதிபதி கே.காயத்திரி, மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி எம்.எழிலரசி,குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ் மலர்விழி, போக்சோ நீதிமன்ற நீதிபதி ஆர் கே பி தமிழரசி, நிரந்தர சமரச தீர்வு மைய தலைவர் மோகன குமாரி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஐ ஜெயஸ்ரீ, கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி மற்றும் பிரதம சார்பு நீதிமன்ற நீதிபதி கூடுதல் பொறுப்பு எஸ் தமிழ் செல்வி ,மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எஸ் மஞ்சுளா, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 மற்றும் 2 ஆர் ரீனா, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி, எஸ் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டார்கள். செங்கல்பட்டு பார் அசோசியேசன் தலைவர் போர்வாள் ஏ கே சோமசுந்தரம் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றத்திற்கு வரும் வழக்காடிகள் நலன் சார்ந்த 27 கோரிக்கைகளை நீதிபதிகள் முன்வைத்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி பேசினார். மேற்படி கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நீதிபதிகள் சார்பில், முதன்மை மாவட்ட நீதிபதி ஜெ மேவிஸ் தீபிகா சுந்தரவதனா எந்தெந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்று பதில் அளித்து பேசினார்.மேற்படி கூட்டத்தில் செங்கல்பட்டு பார் அசோசியேஷன் நிர்வாகிகள், செயலாளர் ஜி சங்கர், பொருளாளர் பி முனியாண்டி ,துணைத் தலைவர் பி மீனாட்சி, மகளீர் துணை தலைவர் இ சுகந்த குமாரி, இணை செயலாளர் என். முருகன், நூலகர் டி அஸ்வினி மற்றும் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆர் திருமுருகன் அரசு வழக்கறிஞர் வையாபுரி மற்றும் முன்னாள் சங்க தலைவர்கள் பாலகிருஷ்ணன், கனகராஜ் ,மூத்த வழக்கறிஞர் இயேசு மரியான் ஆகியோர் நீதிபதிகளுக்கு சால்வை அணிவித்து பூச்செண்டு கொடுத்து மகிழ்வுடன் வரவேற்றார்கள்.
கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள்,மூத்த, இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் சிறப்பான முறையில் நடந்ததாகவும் வழக்கறிஞர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி அவர்கள் தெரிவித்தார்.