மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி,
தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்மணிதுறை அமைச்சர் எ. வ.வேலு அவர்களின் ஆலோசனை படி,
செவ்வாய் கிழமை காலை கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.தா.உதயசூரியன்அவர்களின் தலைமையில் “நீட் விலக்கு நம் இலக்கு” என்ற தலைப்பில் மாணவர்களின் நலன் கருதி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து இடும் நிகழ்வை சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.
இதில் சின்னசேலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர், சின்னசேலம் ஒன்றிய குழு துணை தலைவர் .வி.வி அன்புமணிமாறன் கலந்துகொண்டு கையொப்பம் பதிவு செய்தார். மேலும் இந்த நிகழ்வில் மாநில மகளிரணி துணை செயலாளர் அங்கையற்கன்னி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தங்களது கையெழுத்துகளை பதிவு செய்தனர்.