ரெட் டைமண்ட் பிளட் டோனர்ஸ் டிரஸ்ட் அமைப்பு சார்பாக தீபாவாளி நல்ல வாழ்துக்கள் மற்றும் பாதுகாப்பான பட்டாசு வெடிப்பது பற்றி சிறு விழுப்புணர்வு நம்முடைய மொத்த பட்டாசுகளை வெடிக்கும் பொழுது கால்களில் காலணிகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
தண்ணீர் நிறைந்த வாளியை பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் வைத்திருக்க வேண்டும். இதனால் தீ விபத்துகள் ஏற்பட்டாலும் அவற்றை எளிதில் அனைத்து விட முடியும்.
ஒரு நேரத்தில் ஒரு வெடியை மட்டுமே வெடிக்க வேண்டும். ஒருவர் பட்டாசை வெடிக்கும் பொழுது மற்றவர்கள் அதை பார்ப்பது (பாதுகாப்பான தூரத்திலிருந்து) பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
நாம் வசிக்கும் குடியிருப்பு பகுதி, அடுக்குமாடிக்
குடியிருப்புகளில் தீபாவளிக்கு முன் பட்டாசுகளை எவ்வாறு கையாள்வது, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஒரு கூட்டம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்
மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள், நடமாடும் இடங்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடங்களிலிருந்து ஒதுங்கி பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
*எப்பொழுதுமே பட்டாசுகளை வெடிக்க நீளமான அகர்பத்தியை பயன்படுத்துவது நல்லது. அதே போல் பட்டாசுகளை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்தே வெடிக்க வேண்டும்.
பட்டாசுகளின் மேல் அச்சிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை படித்து பின்பு அதன்படி பட்டாசுகளை வெடிப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.
ராக்கெட் போன்ற வானவேடிக்கை பட்டாசுகளை பற்றவைப்பதற்கு முன் திறந்த ஜன்னல், கதவுகள், பால்கனி போன்றவற்றை நோக்கி இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிப்பது நல்லது. இதன் மூலம் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்
பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அனைவருக்கும் எடுத்துக்கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
தீபாவளி பண்டிகை என்பது பட்டாசுகள் வாணவேடிக்கைகளுடன் குதுகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அனைவருக்கும் எடுத்துக்கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதை அனைவருக்கும். தெரிவிக்க வேண்டும் என்று
ரெட் டைமண்ட் பிளட் டோனர்ஸ் டிரஸ்ட் அமைப்பின் சார்பாக பி.வி. களத்தூர் டாக்டர் விஜயகுமார்தெரிவித்துள்ளார்.