குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல்  குமார்  உத்தரவின் பேரில் மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை  காவல் கண்காணிப்பாளர் விஜய கார்த்திக் ராஜ்   வழிகாட்டுதலின்படி விருதுநகர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் விருதுநகர் குடிமைப் பொருள் வழங்கல்  கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அனுராதா, ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை  சார்பு ஆய்வாளர்  சிவஞான பாண்டியன் மற்றும் தலைமை காவலர்கள் முத்துகிருஷ்ணன்,  குமாரசாமி,  தேவேந்திரன்  ஆகியோர் கேணிக்கரை செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி அருகே இன்று வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சேலம் (மேற்கு) பதிவெண் லாரி, அதை தொடர்ந்து வந்த மதுரை (தெற்கு) பதிவெண் காரை  சோதனை செய்தனர்.   லாரியில்  தலா 50 கிலோ வீதம் 173 மூடைகளில் 8,650 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.. இது தொடர்பாக  சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த லாரி டிரைவர் தெய்வேந்திரன் 42, சிவகங்கை நேதாஜி மகன் சரவணன் 24 ஆகியோரை கைது செய்தனர். காரை ஓட்டி வந்து தப்பி ஓடிய முத்துப்பாண்டி, அரிசி வியாபாரி கேணிக்கரை சேர்ந்த நிஷா என்பவரை போலீசார் தேடி வந்து வருகின்றனர்.