அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், குலோத்துங்கநல்லூரில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடையினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தொல்.திருமாவளவன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், குலோத்துங்கநல்லூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்; ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலைக்கடையை இன்றையதினம் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். மேலும், நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி, நியாய விலைக்கடை விற்பனையினையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.