திருவண்ணாமலை மாவட்ட சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை தேசிய புறவழிச்சாலையில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அரவிந்த பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தார் பொருளாளர் அருள் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்
ஆன்லைன் வழக்கு விதிப்பை ரத்து செய்ய வேண்டும்.
அரசு மணல் குவாரிகளை உரிமையாளர் திறக்க வேண்டும் .
என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது இந்தப் போராட்டத்தில் துணைத் தலைவர் ஆனந்தன் துணை செயலாளர் பரசுராமன் மற்றும் நிர்வாகிகள் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.