வேலூர் மாவட்டம், வேலூர் மண்டலம் தலைமை அலுவலகம் அருகில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வேலூர் மண்டலம் சார்பாக தீபாவளிக்கு முன்னதாக டிஏ வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறிய போக்குவரத்து துறை செயலாளரின் உறுதிமொழியை நிறைவேற்றாதை கண்டித்தும், 2022 டிசம்பர் முதல் 2023 அக்டோபர் வரை பணி ஓய்வு ,விருப்ப ஓய்வு, இறந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்கள் வழங்காததை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை வழங்குவதாக கூறிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதை கண்டித்தும், 8 ஆண்டுகள் கடந்தும் கூட இந்த அரசும் ஓய்வூதியத்தவர்களின் பஞ்சபடி தீர்வு காணவில்லை ஓய்வு தொழிலாளர்களின் பிஎஃப் மற்றும் பணிக்கொடை இதர பலன்கள் வழங்கவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மண்டல தலைவர் பக்தவச்சலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது uu.மண்டல நிர்வாகிகள் செந்தாமரை ,மோகன் ,குணசேகர் ,சுந்தரவேலு ,ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மாநில இணைச்செயலாளர் கோவிந்தசாமி சிறப்பு உரையாற்றினார். மண்டல பொருளாளர் சுந்தரம் நன்றி உரையாற்றினார். இதில் வேலூர் மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்