தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்ந்த பசி போக்கும் தளம் தென்பொதிகை டிரஸ்ட், மூலம் ஐப்பசி மாத அமாவாசை அன்னதானம் தென்காசி அரசு மருத்துவமனையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த அன்னதானத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், வயோதிக முதியவர்கள், நோயாளிகள், கைக்குழந்தையுடன் வந்த தாய்மார்கள் என மொத்தம் 700 பேர் பசியாறினார்கள்.
இந்த அமைப்பு 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு தர்ம சிந்தனை உள்ள நல்லுள்ளங்களை ஒருங்கிணைத்து அதன் மூலம் பெறப்படும் நிதி உதவியில் தொடர் அன்னதானத்தை மேற்கொண்டு வருகிறது.
கொரொனா கால கட்டத்திலும் தொடர் அன்னதானம் மேற்கொள்ளப்பட்டது.
அது மட்டும் இல்லாமல் நிறைய மாவட்டங்களில் ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுதிறனாளிகள், கண் பார்வை குறைபாடுடைய, மனவளர்ச்சி குன்றிய ஆசிரமங்களிலும் தொடர் அன்னதானம் வழங்கி வருகிறார்கள். இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற தாரக மந்திரத்துடன்
பசி பிணி போக்கும் தொடர் முயற்சியில் பசி போக்கும் தளம் தென்பொதிகை டிரஸ்ட், இலஞ்சி பயணிக்கிறது.