சென்னை மாநகரின் மையப் பகுதியில் பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் உயர் சிகிச்சையை வழங்குவதில் புகழ்பெற்றிருக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் ஒரிசாவைச் சேர்ந்த 11 மாதமே ஆன குறைந்த உடல் எடை கொண்ட ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றும் வகையில் உயிருள்ள தானமளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பதை அறிவிப்பதில் பெருமைகொள்கிறது. சராசரி உடல் எடைக்கும் குறைவான இக்குழந்தைக்கு கல்லீரல் புற்றுநோய் (ஹெபடோபிளாஸ்டோமா) இருந்தது. அத்துடன் பெக்வித்-வீடமேன் சிண்ட்ரோம் என அழைக்கப்படும் ஒரு அரிய மரபியல் பிறவி கோளாறாலும் இக்குழந்தை அவதிப்பட்டு வந்தது.
ஒரு அரிதான கல்லீரல் புற்றுநோயான ஹெபடோபிளாஸ்டோமா பாதிப்போடு 2023 ஜுலை மாதத்தில் எம்ஜிஎம் ஹெல்த்கேரில் இக்குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. பிற மருத்துவமனைகளில் கீமோதெரபியின் எட்டு சுழற்சி சிகிச்சைகளை அதற்கு முன்பு பெற்றிருந்த நிலையில், இக்குழந்தையின் பெற்றோர்கள் எம்ஜிஎம் ஹெல்த்கேரில் இக்குழந்தையின் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கத்தோடு இங்கு குழந்தையை அழைத்து வந்திருந்தனர். எம்ஜிஎம் ஹெல்த்கேரின் கல்லீரல் நோய்கள், உறுப்புமாற்று மற்றும் ஹெச்பிபீ அறுவைசிகிச்சை துறையின் இயக்குநர் டாக்டர். தியாகராஜன் ஶ்ரீனிவாசன் மற்றும் இதன் இயக்குநர் டாக்டர். கார்த்திக் மதிவாணன் ஆகியோர் மேற்கொண்ட பரிசோதனைகளில், மிகை வளர்ச்சியோடு தொடர்புடைய ஒரு அரிதான மரபியல் கோளாறான பெக்வித்-வீடமேன் சிண்ட்ரோம் என்ற கூடுதல் பாதிப்பும் மற்றும் புற்றுக்கட்டிகளுக்கு அதிகரித்த இடர்வாய்ப்பும் இருப்பது கண்டறியப்பட்டது. பிறக்கும் 10,500 முதல் 13,700 பச்சிளங்குழந்தைகளில் ஒரு குழந்தையிடம் இந்த மரபியல் கோளாறு காணப்படுகிறது; இந்த நோய்க்குறி, ஒரு தனித்துவமான மருத்துவ சவாலை முன்வைக்கிறது.
புற்றுக்கட்டியை அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றும் வாய்ப்பை எம்ஜிஎம் மருத்துவக்குழு மிகக்கவனமாக மதிப்பாய்வு செய்தது; ஆனால் கல்லீரலின் மையப் பகுதியில் இக்கட்டி அமைந்திருந்தது, கல்லீரல் உறுப்பை சேதப்படுத்தாமல் அதை அகற்றுவதை பாதுகாப்பற்றதாக ஆக்கியிருந்தது. எனவே இதைத் தொடர்ந்து உயிருள்ள தானமளிப்பவரிடமிருந்து பெறப்படும் கல்லீரலைக் கொண்டு கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை மேற்கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டது.
டாக்டர். தியாகராஜன் ஶ்ரீனிவாசன் தலைமையிலான, மருத்துவர்களது குழு ஸ்வாப் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு இக்குழந்தைக்கு மறுவாழ்வை தந்திருக்கிறது.
இச்சிகிச்சையில் இருந்த சிக்கல்கள் குறித்து டாக்டர். தியாகராஜன் ஶ்ரீனிவாசன் பேசுகையில், “பொருத்தமான இரத்த உறவுள்ள உயிருள்ள தானமளிப்பவரிடமிருந்து கல்லீரல் பெற இயலாமை மற்றும் உடல் மெலிவுச் சீர்கேடு மற்றும் தொற்று போன்ற கீமோதெரபிக்கு பிந்தைய சிக்கல்கள் உட்பட பல்வேறு சவால்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த கடுமையான சவால்களை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு ஊட்டச்சத்து ஆதரவு மற்றும் தொற்றுக்கான சிகிச்சை வழியாக இக்குழந்தை நோயாளியை அறுவைசிகிச்சைக்கு உரிய உடற்தகுதியுள்ளதாக ஆக்க வேண்டியிருந்தது. அதன்பிறகே உயிருள்ள தானமளிப்பவரிடமிருந்து பெறப்பட்ட கல்லீரலைக் கொண்டு உறுப்புமாற்று சிகிச்சையை நாங்கள் வெற்றிகரமான மேற்கொண்டோம்,” என்று கூறினார்.