தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்துக்கல்வலசை பகுதியில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த தாசையா என்பவரின் மகளை கௌரி என்பவரை அதே பகுதியை சேர்ந்த முருகையா என்பவர் மகன் மனோஜ் குமார் தனது கூட்டாளிகளுடன் தாசையாவை தாக்கி அவரது பெண்ணை காரில் கடத்தி சென்றனர் ,தகவல் அறிந்து வழக்கு பதிவு செய்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தென்காசி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் விரைந்து செயல்பட்டு பூவையா என்பவர் மகன் முத்துக்குமார் என்பவரை கைது செய்தும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை கைப்பற்றினர். எதிரி முத்துக்குமார் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேலும் தப்பி ஓடிய எதிரிகளை மனோஜ் குமார் என்பவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் விரைந்து எதிரிகளை கைது செய்ய துரித செயலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.