சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் இணைந்து திருமணிமுத்தாறு, ராஜ வாய்க்கால்,ஏரி பாசன விவசாய சங்கங்களின்,சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தங்கவேல், மாவட்டச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன;

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் போராளிகள் அருள் உட்பட அனைவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பேற்று நிபந்தனையின்றி உடன் விடுதலை செய்திட வேண்டி மற்றும் மேல்மா சிப்காட் இட்டத்தை ரத்து செய்திட வேண்டும்,பொய் வழக்கு போட்டு

விவசாயிகளின் குடும்பங்களிடமிருந்து மிரட்டிப்பெற்ற நிபதனை கடிதங்களை திரும்ப கொடுத்திட வேண்டும்,தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கைவிட வேண்டி கோரிக்கைகள் தமிழகத்தில் உள்ள கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிந்துரை செய்ய வேண்டி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.