கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில் ஜல்ஜீவன் மிஷின் கிராம குடிநீர் மற்றும் சுகாதாரமான குடிநீர் சம்மந்தமாக கோதவாடி ,கொண்டம்பட்டி, கோடங்கிபாளையம்,குளத்துப்பாளையம் மற்றும் கோவில்பாளையம் போன்ற 5 ஊராட்சிகளுக்கு ஊராட்சிமன்ற தலைவர்,செயலாளர் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர் மற்றும் குடிநீர் பணியாளர்களுக்கு 1 நாள் பயிற்சி நடைபெற்றது. இதில் DRDA சச்சினாந்தம் மற்றும் ரவிக்குமார் பயிற்சி அளித்தனர்.இறுதியில் ஒன்றிய அலுவலர் மாரியம்மாள் முன்னிலையில் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இறுதியில் ஊராட்சி மன்ற தலைவர்,செயலாளர் சுயஉதவிக்குழு உறுப்பினர் மற்றும் குடிநீர் பணியாளர்கள் உடன் இருந்தனர்