கோவை மாவட்டம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல் துறை தலைவர் ஜோசி நிர்மல் குமார் IPS பொறுப்பேற்ற பிறகு தமிழக முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் கோயம்புத்தூர் to கோவை புதூர் அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த TN 66 E 3151 என்ற பதிவெண் கொண்ட காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரை ஓட்டி வந்த அதன் உரிமையாளரான சபீர் அலி(30) த/ பெ சுலைமான், பழனியார்பாளையம், கொழிஞ்சாம்பாறை பாலக்காடு மாவட்டம் என்பவரை கைது செய்து விசாரணை செய்த போது இடையார்பாளையம்,கோவைப்புதூர் பகுதி பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவில் பண்ணைகளில் வேலை செய்து வரும் வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து சபீர் அலியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.