கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் பாரதியார் நகர் பகுதியில், பஸ் நிறுத்தம் அருகே சீனிவாசன் என்பவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்துள்ளதாகவும், எனவே இந்த கடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஓசூர் அட்கோ காவல் நிலையத்திலிருந்து, மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, ஆணையாளர் சினேகா உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகர் தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர் கிரி மற்றும் பணியாளர்கள், அட்கோ சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பெட்டிக் கடைக்கு சீல் வைக்கும் பணியை மேற்கொண்டனர். அப்போது, அங்கு வந்த சீனிவாசனின் மனைவி, போலீசார் மற்றும் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.