திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கோட்டத்தில் அடங்கிய திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் கால்நடை மருந்தக.எல்லைக்குட்பட்ட. நெமிலி கிராமத்திலும். பூனி மாங்காடு கால்நடை மருந்தக எல்லைக்கு ட்பட்ட தாழவேடு கிராமத்திலும் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை திருத்தணி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் எஸ். தாமோதரன் துவக்கி வைத்தார். விழாவில் கால்நடை உதவி மருத்துவர். டாக்டர் மணிமேகலை. டாக்டர்.பெமினா பானு. கால்நடை ஆய்வாளர்கள். சுந்தர். சரவணன். கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள்.அம்மு. திருமலை. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள்.கால்நடை வளர்ப்போர். இதில் திரளாக கலந்துகொண்டனர். முகாமில் கலப்பின கிடேரிகள். பேரணியை நடத்தி.சிறந்த கலப்பின கன்றுகளுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன.சிறந்த கால்நடை பராமரிப்பு விவசாயிகளுக்கு பாராட்டு விருதுகள் மற்றும்.நற்சான்றுகள் வழங்கப்பட்டன முகாமில் 160 விவசாயிகள் கலந்து கொண்டனர். கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம். தடுப்பூசி. செயற்கை முறை கருவூட்டல். சினை பரிசோதனை. மலட்டு தன்மை சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில் மொத்தம் ஆயிரத்து 350 கால்நடைகள் பங்கேற்று பயனடைந்தன.