திருவண்ணாமலையில் வீரபத்திர சுவாமி திருமண மண்டபத்தில்  ஏழாவது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு  திருவண்ணாமலை மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் அவர்களின் தலைமைவாங்கினார்மாநில பொருளாளர் சுமதி   மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்  .லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரவையின் மூத்த தலைவர்கள்.மணிமேகலை ,  .வழக்கறிஞர் மனோகரன் , சேகர் , கணேசன், பிச்சைவேல் ஃதுரைசாமி,முருகேசன்,சண்முகம்,கூட்டத்தில் கீழ்கண்ட   தீர்மானங்கள்  ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

 தீர்மானங்கள்:

1.  மதவாதியால் இந்திய மக்களை பிரித்து ,  சமூக நீதிக்கு விரோதமாகவும்  செயல்பட்டு வருகின்ற  பா.ஜ.க அரசை  தோற்கடிப்பதற்கு  நாம் இந்திய கூட்டணியை ஆதரிப்போம்.

2.  பழங்குடி மக்களின்  சனாதானத்திற்கு எதிரான  இயற்கை வழிபாட்டு முறையான  சர்வ மதத்தை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டி  வலியுறுத்தியும்.

3.  குறும்பர் இன மக்களை  பழங்குடியினர்களாக  அறிவிக்கக் கோரி மத்திய அரசுக்கு  முறையான விளக்கத்துடன்  பரிந்துரை செய்ய  தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

4.  மாநில அரசை ஜாதி வாரியாக கணக்கெடுப்பு செய்ய வலியுறுத்தியும்.

5.  இருசக்கர வாகன பிரச்சார பயணம்  திருச்சியில் இருந்து சென்னை நோக்கி  அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து  பிரச்சாரம் செய்வதென்று முடிவு செய்யப்படுகிறது.

6.  பிரச்சார பயணத்தில் திமுக,  காங்கிரஸ் ,  CPI , CPM ,  விடுதலை சிறுத்தைகள்  கட்சி,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி,  முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன்  ஆதரவு கோரி  பங்களிக்க வைப்பது.

 இந்தப் பிரச்சார சுற்றுப்பயணம்  பிப்ரவரி 1 முதல்  பிப்ரவரி 15 வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

 மேற்கண்ட பிரச்சார பயணத்தில்  இந்தப் பயணத்தை பெண்கள் முன்னெடுத்து நடத்துவார்கள் என்பது  ஏழாவது செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரவை கூட்டத்தில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்துநிர்வாகிகள் தேர்வு 7 வது செயற்குழு கூட்டம்  நடைபெற்றது கூட்டத்தில் பேரவையின் மூத்த தலைவர்கள்மணிமேகலை ,  .வழக்கறிஞர் மனோகரன் , சேகர் , கணேசன், பிச்சைவேல் துரைசாமி,முருகேசன்,சண்முகம்,ஆகியோர் கலந்து கொண்டனர்  மற்றும்அனைத்து மாவட்ட ,   நிர்வாகிகள் என  300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.விழா முடிவில்மாநிலத் துணைச் செயலாளர் சண்முகம்    நன்றி  கூறினார்.