திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் ஊராட்சி பத்மாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் .இவர் ஏற்கனவே காலமாகிவிட்ட நிலையில். அவரது மனைவி நாகரத்தினம்(60) தன் மகன் குடும்பத்தாருடன் திருத்தணி. நேதாஜி . நகர் பகுதியில் வசித்து வந்தார் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று.மேல் சிகிச்சைக்காக. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு மூளை சாவு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. அவர் தன் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக பதிவு செய்த நிலையில் அவர் மரணம் அடைந்தார். தமிழக முதலமைச்சர் உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு இறுதி சடங்குகள் அரசு மரியாதை செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபுசங்கர் ஆர்.டி.ஓ. தீபா.திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன். மற்றும் காவல்துறையினர்
அரசு மரியாதையாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் தாசில்தார் மதன். வருவாய் ஆய்வாளர் கமல். திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பா. ஆர்த்தி ரவி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா குப்பன். நகராட்சி கவுன்சிலர் கே. எஸ். அசோக்குமார். மாவட்ட பிரதிநிதி எம். ஷெரீப். மற்றும் காவல்துறையினர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்..