காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றன
காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் மதுவிலக்கு அமலாக்க துறை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இணைந்து போதை பொருட்களுக்கு எதிரான மதுவிலக்கு சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு உறுதி மொழியை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சண்முகவடிவு முன்னிலையில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் காவலர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.
பின்பு போதைப் பொருள்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்திய படி மருத்துவக் கல்லூரி மாணவிகள் பேரணியை அமலாக்க பிரிவு மாவட்ட துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி காவலன் கேட், வள்ளல் பச்சையப்பன் சாலை, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை வழியாக பேருந்து நிலையம் வரை சென்று முடியுற்றது. இப்பேரணியில் போதைக்கு எதிரான வாசகங்கள் போதை நமக்கு பகை, போதையில் பயணம் பாதையில் மரணம், மருந்து உயிர் காப்பதற்கே, போதை மருந்து உயிர் அழிப்பதற்கே, போதை போதை சாவின் பாதை, போதை உன்னை உயிருடன் உண்ணும் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு பேரணியாக மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் இப்பேரணியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவின் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் மாநில மாவட்ட whatsapp எண்கள் QR கோடு அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.