கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்ட செயலாளருமான . தா. உதயசூரியன் தொடங்கி வைத்தார்.
இந்த சிறப்பு கூட்டத்தினை கள்ளக்குறிச்சி உதவி ஆணையர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மேலும் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் முன்னிலையும், இதனைத் தொடர்ந்து பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சம்பத்குமார் வரவேற்புரையும் வகித்தனர்.
இந்த முகாமில் வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம், பட்டா உட்பிரிவு, மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், வங்கி கடன் வசதி, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பிறப்பு இறப்பு சான்று, வாரிசு சான்று, இணைய வழிப்ப்பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை உள்ளிட்டவை கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
மேலும் இந்த சிறப்பு முகாமில் சின்னசேலம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு துணைப் பெருந்தலைவருமான அன்பு மணிமாறன், சின்னசேலம் வட்டாட்சியர் கமலக்கண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் அசோக் குமார், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர் அருள்சாமி, உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், உதவி மின் பொறியாளர் மணிகண்டன், அசோக், நகர செயலாளர் செந்தில்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் காந்தி, நாகராஜன், அன்னபூரணி, அரசு, மகாலட்சுமி, சாரங்கன், சரவணன் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.