தஞ்சையின் பிரமாண்டமான பிரகதீஸ்வரர் கோயில், அதன் சுவர்களுக்குள் பல நூற்றாண்டுகள் பழமையான ரகசியங்களையும், பழங்கதைகளையும் மறைத்து வைத்துள்ளது. ஆனால் அதை அருகில் கவனித்தால் பல விடைகளை வெளிக்கொணர்கிறது.
சென்னையிலிருந்து சுமார் 340 கிலோமீட்டர் தொலைவில், 11-ஆம் நூற்றாண்டு கோயில், ஓராயிரம் ஆண்டு வரலாற்றின் ஒரு உயர்ந்த சான்றாக நிற்கிறது, இப்பகுதியில் மிக உயரமான மற்றும் பழமையான கட்டிடமாக இன்றுவரை ஆதிக்கம் செலுத்துகிறது.
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரத்தில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பிரகதீஸ்வரர் கோயில், அதன் பிரம்மாண்டத்திற்குப் பொருத்தமாக ‘முழு பிரபஞ்சத்தின் இறைவன்’ என்று பொருள்படும் வகையில் வாழும் பெரிய சோழர் கோயில் என்று போற்றப்படுகிறது.
1003-ஆம் ஆண்டு சோழப் பேரரசின் உச்சக்கட்டத்தின் போது கட்டப்பட்ட இந்த கட்டிடக்கலை அற்புதம், வியப்பூட்டும் வகையில் வெறும் ஏழு வருடங்களில் கட்டிமுடிக்கப்பட்டது. 47 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த கோவில் வளாகம், உள்ளே இருக்கும் பிரம்மாண்டமான சிவலிங்கம் முதல் வெளியே உள்ள நந்தி சிலை வரை, புனித தோற்றங்களின் வரிசையை முழுமையாகக் கொண்டுள்ளது.
இந்த கோவில் பல மர்மங்களை உள்ளடக்கியது. இதில் வடக்கு முகப்பில் உள்ள ஒரு சிற்பம், ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒரு ஐரோப்பியரின் உருவத்தை கொண்டுள்ளது. கோவிலின் எல்லை கடந்த தாக்கங்கள் பற்றியும் தொடர்புகள் பற்றியும் கேள்விகளை எழுப்புகிறது. பிரகதீஸ்வரரின் பிரம்மாண்டத்தை அதன் விமானத்தின் 213 அடி உயரத்தை வைத்து கணித்துக்கொள்ளலாம். அதன் 80 டன் எடைகொண்ட கும்பம், அதைத் தாங்குவதற்கு கீழே தூண்கள் எதுவும் இல்லாமல், மேலே உச்சியில் நிற்கிறது. 200 அடிக்கு மேல் 80 டன் எடையை எப்படி இழுத்து வந்து நிரந்தரமாக அங்கே நிறுவினார்கள்? இதற்கான விடைகளை, பிரபல எழுத்தாளரும் முன்னணி வரலாற்றாசிரியருமான வில்லியம் டால்ரிம்பிள், வரும் வெள்ளிக்கிழமை, ஜனவரி 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஹிஸ்டரி டிவி18 (HistoryTV18)-இல் வரலாற்றின் பதிவிடப்படாத அத்தியாயங்களை வெளிப்படுத்துவதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வாரமும், இந்தத் தொடர், அழுத்தமான கதை சொல்லலுடன் முன்னணி தயாரிப்பு மதிப்புகளை ஒருங்கிணைத்து இந்தியாவின் பதிவு செய்யப்படாத பொக்கிஷங்களைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.
மறக்கப்பட்ட கடந்த காலத்தின் மர்மங்களையும் அற்புதங்களையும் வெளிப்படுத்த இந்த ஆழ்ந்த தேடலில் தயாராகுங்கள். ஹிஸ்டரி டிவி18-இல் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளியன்று இரவு 9 மணிக்கு இந்தியாவின் கதைகள் அடங்கிய இந்தப் பயணத்தில் எங்களுடன் சேர்ந்திருங்கள்.