திருத்தணி நகராட்சி மக்களின் குடிநீர் தேவை கருதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த அரசு ஆணை அறிவித்து ரூபாய் 109. 68 கோடி மதிப்பீட்டில் ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் திருப்பாற்கடல் பகுதியில் நீர்உறிஞ்சி கிணறுகள்

 நீராதாரமாக கொண்டு  திருத்தணிக்கு பைப்புகள் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு  வினியோகம் செய்வதற்கு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த. இந்த குடிநீர் வழங்கும் திட்டத்தை  சென்னையில் முதலமைச்சர்

 மு. க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். அப்போது திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் சேகர்வர்மா  நகரில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி. 3.95 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரை மோட்டாரை இயக்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர்

.ஆ. சாமிராஜ் அனைவரையும் வரவேற்றார். இதில் நகராட்சி பொறியாளர் விஜயராஜ் காமராஜ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் அதிகாரிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்..