வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நல சங்கங்களின் கூட்டமைப்பினை சேலம் கோட்டை மைதானத்தில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர் . 50 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது ஒரு வருடம் ஆகியும் பதில் மாவட்ட நிர்வாகத்திடம் நடவடிக்கை இல்லை வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை தேவை அரசுத்துறை, தனியார் துறை நிறுவனங்கள் ,பூங்காக்கள் ,வணிக வளாகம் ,திருமண மண்டபம் ,திரையரங்குகள், மருத்துவமனை ,ஏடிஎம் வங்கிகள் மாற்றத்திறனாளிகள் எளிதில் சென்று வர சாய்வு தளம் வசதி தடையில்லா சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் சேலம் மாவட்டத்தில் வருவாய் துறை மூலம் வழங்கப்படும் ஓய்வூதிய ரூபாய் 1500 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு ஒ ய்வுதியம் ரூபாய் 2000 கடந்த ஆறு மாதங்களுக்கு முன் புதிதாக விண்ணப்பித்த அனைத்து மாற்றத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் சேலம் புதிய பழைய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனம் நிறுத்துவதற்கு இடம் வசதி செய்து தருதல் வேண்டும் புதிய பழைய பேருந்து நிலையத்தில் மாற்று திறனாளிகள் வியாபாரம் சிறு மற்றும் குறு தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பிடம் வசதி புதுப்பித்தல் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்
சேலம் வட்டம் சேலம் மேற்கு வட்டம் சேலம் தெற்கு வட்டம் வாழப்பாடி வட்டம் ஏற்காடு வட்டம் வணிக வளாகம் கடைகள் ஒதுக்கீடு செய்யும் போது மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடை வழங்கப்பட வேண்டும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்க தலைவர் குமரேசன் ,சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கம் துணைத் தலைவர் ராஜா, எழுச்சியுரை ஆற்றிய தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நல சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆர் .ராஜரத்தினம், வாழ்த்துரை வழங்கிய சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச்சங்கம் ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா ,k. அறிவழகன் c. அறிவழகன், ஏற்காடு சுரேஷ், பொருளாளர் சுப்பிரமணி நன்றியுரை வழங்கிய சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்கம் செயலாளர் சக்திவேல் ஜெயம் அனைத்து வகை மாற்றித் திறனாளிகள் டிரஸ்ட் தலைவர் ஜெய்சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.