தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டப்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில். இப்பூவுலகில் அவதாரம் எடுத்த ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில் முதல்கால பூஜையை ராமேஸ்வரத்திலும், இரண்டாம்கால பூஜைக்காக தீர்த்தகிரிமலை (தீர்த்தமலை) மீது அம்பு எய்தி, தீர்த்தம் உண்டாக்கி அந்த தீர்த்தத்தைக் கொண்டு பூஜைகளை முடித்தார். அந்ததீர்த்தமே தீர்த்தமலையிலுள்ள ராமர் தீர்த்தமாகும்.
ஸ்ரீ ராமர், பார்வதிதேவி, குமரக்கடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர் ஆகியோர் தவம்செய்து பாவவிமோசனம் பெற்ற தலம் இந்த திருத்தலமாகும். தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் அருளி செய்யப்பட்ட ஒரே திருத்தலம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலமாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த திருக்கோயில் மாசிமக
தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேர் திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சியில் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.தேர் திருவிழா கொடியேற்றத்தையெடுத்து, பிப்ரவரி 28 -ம் தேதி இரவு 9 மணியளவில் சுவாமிகள் திருக்கல்யாணமும், மார்ச் 1 ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில் அரூர் பேரூராட்சி தலைவர் இந்திராணிதபால் துணை தலைவர் சூர்யாதனபால் நியமண குழுாஉறுப்பினர் முல்லைரவி செயல்அலுவலர் பிரபு காவல் ஆய்வாளர்கள் உமாசங்கர் சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .