திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதாக புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், உத்தரவின்பேரில் திருநெல்வேலி உதவி ஆணையாளர் லெனின் தலைமையில், கண்டியபேரி வெள்ளக்கோவில் தெருவில், சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் உறிஞ்சிய மின் மோட்டார்கள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் பகுதிக்கு உட்பட்ட பங்களாப்பா நகரில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதால் பலருக்கு முறையாக தண்ணீர் வருவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.