தமிழக சட்டப்பேரவையில் மாவீரன் கொங்கு குணாளன் நாடாருக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார். கொங்கு தேச மக்களின் விடுதலைக்காக மாவீரன் தீரன் சின்னமலையின் போர்படை தளபதியாக இருந்து ஆங்கிலேயரை விரட்டி அடித்து சங்ககிரி கோட்டையிலே தூக்கு கயிறு முத்தமிட்ட கொங்கு நாட்டு மாவீரன் குணாளன் நாடார் அரசு விழா மற்றும் மணிமண்டபம் சிலை அமைத்தல் தொடர்பாக நமது நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து மனு கொடுத்து வந்துள்ளார் சென்ற வாரம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் எம்எல்ஏ, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தித்து மனு கொடுத்தார். மேலும் நமது மாவட்டத்தின் அமைச்சர் சு. முத்துசாமி தொடர்ந்து இது சம்பந்தமாக பேசி வருகிறார், மேலும் செய்தி துறை மற்றும் தமிழ் வளர்ச்சி அமைச்சர் மு. பெ.சாமிநாதன் நமது சங்கத்தின் சார்பாக சந்தித்து மனு கொடுத்துள்ளோம். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் . முதல்முறையாக பாரம்பரிய மிக்க தமிழக சட்டமன்றத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது நம் மாவீரன் கொங்கு குணாளன் நாடார் வரலாறு மேலும் வரலாற்று மீட்டெடுக்க குரல் கொடுத்திருக்கும் மரியாதைக்குரிய அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் எம்எல்ஏவை அந்தியூர் இல்லத்தில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று நேரில் சந்தித்து மலர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை கூறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் டன் ஐயா அவர்களுக்கும், இதற்காக உறுதுணையாக இருக்கும் வீட்டு வசதி துறை அமைச்சர் மரியாதைக்குரிய சு. முத்துசாமி அண்ணன் , மரியாதைக்குரிய செய்தி துறை அமைச்சர் மு.பே சாமிநாதன் அண்ணன் , பாசத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அக்கா தொலைக்காட்சியில் குணாளன் நாடார் குரல் கொடுத்த அரசியல் திறனாய்வாளர் ரவீந்திர துரைசாமி ஆகியோர்க்கு தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் ஒட்டுமொத்த கொங்கு மண்டலம் நாடார் சமுதாய மக்கள் சார்பாகவும் இந்த நேரத்தில் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்என தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் எம் கே டி கோவிந்தசாமிநாடார், குளுக்கோஸ் பழனிச்சாமி நாடார்,சோலி சந்திரசேகர் நாடார், ராஜேந்திரன் நாடார், கௌரிசங்கர் நாடார் கலைவாணன் நாடார்,ஹரி நாடார், தாமோதரன் நாடார், ஈஸ்வரமூர்த்தி நாடார். சோமசுந்தரம் நாடார்,பொன்மணி நாடார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திருமூர்த்தி நாடார், கொங்கு தம்பி சாரதி நாடார், ஒன்றிய நிர்வாகிகள் யுவராஜ் நாடார்.ஆறுமுகம் நாடார், ராசு நாடார், மணிகண்டன் நாடார், நகர நிர்வாகிகள் மணிகண்டன் நாடார், ஆறுச்சாமி நாடார், ஆகியோர் கலந்துகொண்டனர்.