விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் திரு.தொல் திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் தேர்தல் நடைமுறையில் இருந்து வரும் EVM மெஷினை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் கள்ளக்குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் இரா. மதியழகன், சேந்தநாடு அறிவுக்கரசு ஆகியோர் தலைமையில், மாவட்ட பொருளாளர் கலையழகன், மாவட்டத் துணைச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், கனக அம்பேத், சங்கராபுரம் தொகுதி செயலாளர் அம்பிகாபதி, நாடாளுமன்ற தொகுதிச் செயலாளர் சேரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழழகன், தொண்டரணி துணை செயலாளர் தமிழ் பொன்னி, தொகுதி துணைச் செயலாளர் கோவேந்தன், தொகுதி ஆகியோர் முன்னிலையில், வரவேற்புரையாக கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் அலெக்ஸாண்டர், கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் மாணிக்க நிலவன், ஒன்றிய பொருளாளர் சுந்தர்ராஜ், நகர செயலாளர் பாவரசு ஆகியோர் முன்னிலையில் “EVM மெஷின் வேண்டாம் வாக்கு சீட்டு முறை வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் சு.க விடுதலைச் செழியன் மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தயா. நெப்போலியன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒட்டுமொத்த விடுதலைச் சிறுத்தைகளின் ஒருமித்த குரலாய் “வேண்டாம் வேண்டாம் EVM மெஷின் வேண்டும் வேண்டும் பழைய வாக்குச்சீட்டு முறை” எனக் கோஷமிட்டு தங்களது கண்டன ஆர்ப்பாட்டத்தை வெளிக்கொணந்தனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் ராஜ்குமார், மண்டல துணை செயலாளர் பொன்னிவளவன், மேனாள்மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் ஆகியோர் தங்களது கண்டன உரைகளை நிகழ்த்தினார்.
மேலும் இக் கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர துணை அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் மகளிர் விடுதலைச் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.