திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த நெய்த வாயல் கிராமத்தில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் மீஞ்சூர் எம்.எம்.ஆர் கிளினிக்கல் கேர் மற்றும் அபிநயா பிசியோதெரபி கிளினிக் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை குழந்தையின்மை ஆலோசனை மற்றும் பிசியோதெரபி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கண்ணில் குறைபாடு உள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இலவச விழிலென்ஸ் பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது போக்குவரத்து தங்கும் இடம் உணவு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் முகாம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வரும் வரை அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்பட்டது. மேலும் சர்க்கரை நோய் பரிசோதனை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை,ரத்த அணுக்களின் தொகுப்பு,விந்து பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மகளிர் நலன் மற்றும் கருத்தரிப்பு நிபுணர் அனுப்பிரியா கருத்தரிப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினார். மூட்டு வலி,இடுப்பு வலி,கழுத்து வலி,நரம்பியல் பிரச்சனை,விளையாட்டு காயம்,எலும்பு நிலைகள்,முதியோர் பிரச்சினைக்கு வலி சிகிச்சை நிபுணர் அபிநயா பிசியோதெரபி மூலம் சிகிச்சை அளித்தார்.ஆண்ராலஜிஸ்ட் மகேஷ்குமார்,எம்ரியாலஜிஸ்ட் வைஷ்ணவி தேவி மருத்துவக் குழுவை ஒருங்கிணைத்து முகாம் நடத்த உதவினர்.நெய்த வாயல் ஊராட்சி மன்ற தலைவர் பாலன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என். ஆர்.கோபால் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகள்,பெண்கள்,முதியோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.