பேடன் பவுல் பிறந்தநாளை சிந்தனை நாளாக கொண்டப்படுகின்றது இதன் அடிப்படையில் வேலூர் முஸ்லீம் மே.நி.பள்ளியில் காலை 9 – 00 மணிக்கு சாரண இயக்க கொடி ஏற்றப்பட்டு மாவட்ட ஆணையர் சிவவடிவு கொடி அசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். இப்பேரணி முஸ்லிம் பள்ளியிலிருந்து வேலூர் முக்கிய வீதிகளில் சென்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைத்தானதில் முடிவுற்றது. இப்பேரணியில் மாவட்ட அமைப்பு ஆணையர் ஜெ.ஜான் பாபு ALT (S), மாவட்ட பயிற்சி ஆணையர் .M. டேவிட் ALT (S), மாவட்ட இணைச்செயலர் அருள்ஜோதி, மாவட்ட பயிற்சி ஆணையர் ஹெலன், மாவட்ட அமைப்பு ஆணையர் .மகேஷ்வரி மற்றும் சாரண ஆசிரியர்கள்-வழிக் கட்டித் தலைவிகள் மாணவ/மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.