.
திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் ஆண்டார்குப்பத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தின விழா கொண்டாடுவது,நாடாளுமன்ற தேர்தல் குறித்து, சென்னை மெரினாவில் அண்ணா மற்றும் கலைஞர் நினைவு சின்னங்கள் அமைப்பது குறித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அவை தலைவர் பகலவன் தலைமையில் மாவட்ட செயலாளர் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பணி குழு பொறுப்பாளர் பி.டி.அரசகுமார் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.ஒன்றிய செயலாளர் சோழவரம் செல்வ சேகரன் வரவேற்ற
இதில் திமுக கழக சொத்து பிரிவு அமைப்பாளர் ஈ.ஏ.பி. சிவாஜி,மாநில இலக்கிய அணி பிரிவு பாஸ்கர் சுந்தரம்,மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் உமா மகேஸ்வரி,மாவட்ட துணைச் செயலாளர்கள் கதிரவன்,டாக்டர் பரிமளம் விஸ்வநாதன்,ஒன்றிய செயலாளர்
வல்லூர் எம்.எஸ். கே.ரமேஷ் ராஜ், காணிப்பாக்கம் ஜெகதீசன்,கும்மிடிப்பூண்டி மணிபாலன்,கி.வே.ஆனந்தகுமார்,மாநில,மாவட்ட நிர்வாகிகள் அன்பு வாணன்,மூர்த்தி, தேராணி தேசப்பன்,பழவை முகமது அலவி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.