திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக பெரியபாளையம் காவல் நிலைய மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.எனவே,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமுல்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் மாலை பூச்சிஅத்தி பேடு பஜார் வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் பொன்னேரி தாலுக்கா,விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (வயது36) என்பது தெரியவந்தது.மேலும்,கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட குற்றவாளி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா,மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.பின்னர், வழக்கு பதிவு செய்து குற்றவாளியை ஊத்துக்கோட்டை முதல் நிலை குற்றவியல் நீதிமன்றம் மாஜிஸ்ரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.பின்னர், அவரது உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.