தென்காசி நகர எஸ்டிபிஐ மருத்துவ சேவை அணி மற்றும் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் ஆலியா ஹோமியோ கிளினிக் மற்றும் புரோவிஷன் கண் மருத்துவமனை நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் பாபக்கி தங்கள் மதரசாவில் வைத்து நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவ சேவை அணி நகர பொறுப்பாளர் ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார். நகர செயலாளர் முஹம்மது ரபீக்,நகர துணைத்தலைவர் பீர் முஹம்மது, நகர துணைச்செயலாளர் ஜாஹிர் ஹுசைன்,நகர பொருளாளர் பாதுஷா, நகர செயற்குழு உறுப்பினர்கள் சலீம்,கலீல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அஇஅதிமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வமோகன்தாஸ் பாண்டியன் கலந்து கொண்டு எஸ்டிபிஐ கட்சியின் மக்கள் சேவைகளை பாராட்டி சிறப்புரையாற்றி முகாமினை துவக்கி வைத்தார்,
சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் சிக்கந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மஹ்மூத், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி, மாவட்ட செயலாளர் முத்து முஹம்மது மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனா, சேனா சர்தார், மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் செய்யது இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி, சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் ஷேக் முஹம்மது, அஇஅதிமுக நகர செயலாளர் சுடலை, ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன் நகர்மன்ற உறுப்பினர் ராசப்பா, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் பாலமுருகன், மாரிமுத்து, சாமி ஆசாரி, நகர துணை செயலாளர் மைமூன் பீவி, பிரதிநிதி கருப்பசாமிராஜா, ஸ்டீல் மாரியப்பன், வார்டு செயலாளர்கள் அகமதுஷா, காஜா மைதீன், பீர்முகம்மது, செய்யது அலிபாதுஷா, ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 50 க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். நகர ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அப்துல் அமீர் நன்றி கூற முகாம் இனிதே நிறைவுற்றது. மருத்துவ முகாமில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.