தஞ்சையில் பெண் நில அளவையரைத் தாக்கிய நபர்களை கைது செய்யக் கோரி, திருவண்ணாமலையில் நில அளவையர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டை வட்டம், பெரிய கோட்டைகிராமத்தில் நில அளவையர் வீ.பவ்யா அண்மையில் நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தாராம்.
அப்போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கிய முருகானந்தம் மற்றும் அவரது தரப்பினரை கைது செய்யக் கோரி, தமிழகம் முழுவதும் நில அளவையர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, தமிழ் நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்டக் கிளை சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, ஒன்றிப்பின்
திருவண்ணாமலை மாவட்டச் செயலாளலர் எஸ்.சையத் ஜலால், தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். ஒன்றிப்பின் முன்னாள் மாவட்டச் செயலர் முல்லை வழுதி, முன்னாள் மாநிலச் செயலர் வரதராஜன், முன்னாள் மாநிலத் தலைவர் பழனி, ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி சந்துரு, கீழ்பென்னாத்தூர் வட்டக் கிளைத் தலைவர் பரிதிமாற்கலைஞர், தமிழ் நாடு நெடுஞ்சாலைத் துறை சங்கத்தின் மாநிலச் செயலர் மகாதேவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்
கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், நில அளவையர் வி.பவ்யாவைத் தாக்கிய முருகானந்தனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட் டக் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.