வேலூர் மாவட்டம் ,ஏ.சி.எஸ். மருத்துவ கல்லுாரி, மருத்துவமனை மற்றும் புதிய நீதிக்கட்சி சார்பில், குடியாத்தத்தில் நுாறு சதவீதம் வாக்குப்பதிவு, போதை எதிர்ப்பு விழிப்புணர்வு வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடந்தது.

இந்த மாரத்தான் போட்டி அபிராமி கல்லுாரியில் தொடங்கி ராஜகோபால் பாலிடெக்னிக், திருமகள் ஆலைக்கல்லுாரி, அம்பேத்கர் சிலை வழியாக சென்று அங்குள்ள தனியார் மண்டம் அருகே நிறைவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 

இதில், மாவட்ட செயலாளர் செந்தில், மாநில தொண்டரணி செயலாளர் பட்டு பாபு, நகர செயலாளர் ரமேஷ், கே.வி.குப்பம் தொகுதி பொறுப்பாளர் பாரத் மகேந்திரன், இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், நகர பொருளாளர் வெங்கடேசன், மாணவரணி நந்தகுமார், ஐடி பிரிவு பிரவீன் உட்பட பலர் இருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை தலைமை அறங்காவலர் லலிதா லட்சுமி, ஏ.சி.எஸ் கல்வி குழும தலைவர் அருண்குமார், செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.