திருப்பூர் மாநகராட்சி முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் மற்றும் மாநகராட்சி பூ மார்க்கெட் ஆகியவற்றில், வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

பேருந்து நிலையத்தின் சுகாதாரம், பராமரிப்பு,கழிவறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பயணிகள் இருக்கைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆய்வு மேற்கொண்டு, அனுமதியின்றி நடைபாதைகளில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

உடன் துணை மேயர் ஆர் பாலசுப்ரமணியம் , வட்ட கழக செயலாளர் ரபீக்  மற்றும் மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.