கரூர் மாவட்டம் 23 கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 136 கிருஷ்ணராயபுரம் (தனி ) சட்டமன்ற தொகுதி பறக்கும் படை குழு (FST1)18.03.2024 பிற்பகல் 1.15 மணி அளவில் கரூர் – திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் மணவாசி சோதனை சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது TN 28 BD 1605 (BOLERO Pik-up)எண் கொண்ட வாகனத்தில் திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சூரம்பட்டி என்ற முகவரியைச் சேர்ந்த . சஞ்சய் காந்தி என்பவரிடம் ரூ24,000/- மற்றும் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம், வசந்தபுரம் என்ற முகவரி சார்ந்த வையாபுரி என்பவரிடமிருந்து ரூபாய் 35,290/- ஆக மொத்தம் ரூபாய் 59,290 இருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. சரியான ஆவணம் இல்லாத காரணத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பறிமுதல் செய்யப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் கிருஷ்ணராயபுரம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மேற்படித்தொகையானது கிருஷ்ணராயபுரம் சார்நிலை கருவூல அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.