திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர். சுந்தரர் ஆகிய மூவர் பெருமக்களால் பாடப்பெற்ற. சைவ திருத்தலங்கள்.பாடல் பெற்ற தலங்கள் என அழைக்கப்படுகின்றன. தொண்டை நாட்டில் இவ்வாறு 32 பாடல் பெற்ற சைவ திருத்தலங்கள் உள்ளன.அவற்றுள் ஒன்றான திருவாலங்காடு15 வது தலமாக விளங்குகிறது. இவ்வாலயம் வரலாற்று சிறப்பும் .இலக்கியத் தொன்மையும் வாய்ந்தது. நினைத்ததை அளிக்கும் காளி திருக்கோயிலும் மூர்த்தி. தலம். தீர்த்தம் எனும் மூன்று பெருமைகளையும் பெற்று. அழகிய மதில் சுவர். கோபுரங்கள். வேலைப்பாடு மிக்க கமலத் திருத்தேர். ஆகியவற்றுடன் வரலாற்று சிறப்புமிக்க நீலி சரிதம் நிகழ்ந்த திருத்தலமாகவும் இது திகழ்கிறது. நடராஜ பெருமான் திரு நடனம் புரிந்த திருச்சபைகளில். திருவாலங்காடு இரத்தின சபை . சிதம்பரம் பொற்சபை. மதுரை வெள்ளி சபை. திருநெல்வேலி தாமிர சபை திருக்குற்றாலம்சித்திர சபை.என வழங்கப்படுகிறது. இதில் இறைவன் நடனம் இயற்றிய ஐம்பெரும் சபைகளில் முதற் சபையான இரத்தின சபை திருவாலங்காடு ஆலயமாகும். மற்ற கோயில்களை விட இவ்வாலயத்திற்கு. தனி சிறப்பு உண்டு. பத்ரகாளி அம்மனுடன் சிவபெருமான் போட்டியில் ஊர்த்த தாண்டவம் ஆடியது இங்குதான். இங்குள்ள சிவனுக்கு வடாரண்யேஸ்வரர் என்றும். அம்பிகைக்கு வண்டார்குழலி என்றும் பெயர் விளங்கி வருகிறது. காரைக்கால் அம்மையார் சிவபெருமானை வழிபட வரும்போது வழியெங்கும் சிவலிங்கம் காட்சியளித்ததால்.கால் பட்டு விடக்கூடாது என்பதால். தலையால் நடந்து வந்து தரிசித்தார். சிவபெருமான் அம்மையாரை அம்மையே என்று அழைத்து. யாது வரம்வேண்டும் என்று கேட்டபோது நீங்காத அன்பு வேண்டும். உலகில் மீண்டும் பிறவாத வரம் வேண்டும். மீண்டும் பிறந்தால்.அப்பிறப்பிலும் தங்களை மறக்காமல் இருக்க வரம் வேண்டும். நீ ஆடிக் கொண்டிருக்கும்போது நான் மகிழ்ந்து நின் திருவடிக்கீழ் என்றும். பாடிக் கொண்டிருக்கும் பேறு வேண்டும். என காரைக்கால் அம்மையார் வரம் கேட்டதும். இந்த ஆலயத்தில் தான். மேலும் இத்தலத்தில் இறைவனிடம் அருள் பெற்ற நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் ஒருவர் மட்டுமே என்பதை இலக்கிய சான்றுகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது. ஆலயமும் திருக்குளமும் கண்ணை கவரும் வகையில். இயற்கையாகவே கிராமிய சூழலில் இரம்மியமாக காட்சி அளிக்கிறது.. அனைவரும் செல்வோம். ஆலங்காட்டானின் அருளை பெறுவோம்..