திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 15ஆம் தேதி பங்குனி உத்திரபெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தினசரி சோமாஸ்கந்தர் பெருமான் சிங்க வாகனம். புலி வாகனம். உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி. காலை மாலை இருவேளைகளில் வீதி உலா வந்து பக்தர்கள் காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கமலத் தேர். தேரோட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் மூலவர் சிவபெருமான் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கமலத் தேரில் சுவாமி எழுந்தருளினார். மங்கள வாத்தியங்கள் முழங்க. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் கொடியசைத்து. 

தேரோ ட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் வீதியில் ஆங்காங்கே சிவகானங்கள் வாசிக்கப்பட்டதோடு தேவ பாராயணங்களும்  நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் .நீர் மோர். தண்ணீர் உள்ளிட்டவை கிராம பொதுமக்கள் பக்தர்களுக்கு வழங்கினர். .தேர்மாட வீதியில் வலம் வந்து நிலைக்கு வந்து அடைந்தது. ஆங்காங்கே பக்தர்கள் தீபாரதனை செய்து சுவாமியை வழிபட்டனர். விழாவில் சென்னை. திருவள்ளூர்.  அரக்கோணம். திருத்தணி. திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணைஆணையர் க.ரமணி அறங்காவல் குழு தலைவர்சு. ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள் கோ. மோகனன்.ஜி. உஷா ரவி.வி. சுரேஷ் பாபு. மு. நாகன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்..