விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி தனியார் திருமண மண்டபத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டசெஞ்சி சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. 

இதில் பாராளுமன்ற  திமுக வேட்பாளர் M.S.தரணி வேந்தனை விழுப்புரம் வடக்கு மாவட்ட இந்திய கூட்டணி சார்பில் வரவேற்று அறிமுகம் செய்து வைத்தார்‌. 

நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆரணி பாராளுமன்ற திமுக வேட்பாளர் M.S.தரணி வேந்தனை சுமார் 3 லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு கூறுகின்றனர்.

 உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார், செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளர் நெடுஞ்செழியன், வல்லம் ஒன்றிய குழு பெருந்தலைவர்  அமுதா ரவிக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், செஞ்சி ஒன்றிய துணை சேர்மன் ஜெயபால்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், விவசாய அணி அஞ்சாசேரி கணேசன், செஞ்சி நகர செயலாளர் கார்த்தி, செஞ்சி தொண்டரணி சோடா பாஷா, செயல் மணி,வழக்கறிஞர் அன்புச்செல்வன், பாபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்