திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி நகராட்சி மன்ற அலுவலகத்தில் சாதாரண மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 8 உறுப்பினர்களே கலந்து கொண்ட நிலையில் மீதமுள்ள 18 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தொடர்ந்து இரண்டு மாதங்களாக கூட்டம் நடத்தப்படவில்லை எனவும் எவ்வித தகவலும் வார்டு கவுன்சிலர்களுக்கு நகர்மன்ற தலைவரால் தெரிவிக்கப்படுவதில்லை எனக்கூறியும், 

வடகிழக்கு பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டங்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை எனக் கூறி இதன் காரணமாக கூட்டத்தை 18 கவுன்சிலர்களும் புறக்கணித்ததாகவும் கூறி வெளிநடப்பு செய்தனர்.

 மேலும் இதுகுறித்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் நகர்மன்ற செயல்பாடுகளை புறக்கணிக்கப் போவதாகவும் கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.